உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் ஆபீசில் மனு

வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் ஆபீசில் மனு

கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி பா.ம.க., வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், கிழக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் தேவனாம்பட்டினம் பாஞ்சாலபுரம் தெரு மக்கள் அளித்த மனு: பாஞ்சாலபுரம் தெருவில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, 42 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். வசிக்கும் இடத்திற்கு மின் கட்டணம், அதே முகவரியில் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளன. இதன் காரணமாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், நகர செயலாளர் ரமேஷ், நகர தலைவர் விஸ்வா, இளைஞரணி செயலாளர் விஜயவர்மன், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை