மேலும் செய்திகள்
இலவச மனைப்பட்டா வழங்கல்
18-Oct-2025
விருத்தாசலம்: அரசு நிலத்தில் வசிக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு, இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டுமென, மா.கம்யூ., சார்பில், தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுார் கிராமத்தில் உள்ள புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில், சிலர் வீடு கட்டி வசிக்கின்றனர். இந்நிலையில், அரசு இடத்தில் வசிக்கும் 17 குடும்பங்களை காலி செய்ய கோரி, தாசில்தார் அரவிந்தன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதன்காரணமாக, விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று தாசில்தார் அரவிந்தனை, மா.கம்யூ., ஒன்றிய செயலர் குமரகுரு தலைமையில், பாதிக்கப்பட்ட மக்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் தகுதியுள்ள நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் அரவிந்தன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது, கம்மாபுரம் ஒன்றிய செயலர் கலைச்செல்வன், கிளை செயலர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய துணை தலைவர் சங்கர் கணேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் மணியரசன், மாதர் சங்க உறுப்பினர் கவிதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
18-Oct-2025