உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 16ம் தேதி மறியல் போராட்டம் பணியாளர் சங்கம் அறிவிப்பு

16ம் தேதி மறியல் போராட்டம் பணியாளர் சங்கம் அறிவிப்பு

கடலுார்: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 16ம் தேதி, 20 மாவட்ட தலைநகரங்களில் அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்க கோரிக்கைகளை, தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அரசுப் பணியாளர் சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, வரும் 16ம் தேதியன்று, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 20 மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். மாநில நிர்வாகிகள் சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார். சங்கத்தின் மாநில பொருளாளர் சரவணன், மாவட்ட தலைவர் இருதயராஜ், ராஜாமணி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை