உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காலி குடங்களுடன் விருதையில் மறியல்

காலி குடங்களுடன் விருதையில் மறியல்

விருத்தாசலம் ; விருத்தாசலம் அடுத்த பேரளையூர் ஊராட்சியில் உள்ள காலனி பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த சில நாட்களாக குடிநீர் போர்வெல் பழுதடைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமமடைந்தனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன், விருத்தாசலம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் சரிவர பதில் கூட தெரிவிக்காத ஊராட்சித் தலைவரை கண்டித்து கோஷமிட்டனர்.பின்னர், ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்க அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தற்காலிகமாக டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வைக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை யேற்று, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ