பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
திட்டக்குடி: திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, சேர்மன் வெண்ணிலா கோதண்டம் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் முரளிதரன், துணை சேர்மன் பரமகுரு முன்னிலை வகித்தனர். நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், நகர அனைத்து வணிகர் நல சங்க நிர்வாகிகள், வணிகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை நகராட்சிக்குட்பட்ட பேக்கரி, ஓட்டல், மளிகை, இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்ட கடைகளில் பிளாஸ்டிக் பை பயன்படுத்தக்கூடாது. மீறினால் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்வதுடன், அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் முரளிதரன் வணிகர்களுக்கு அறிவுறுத்தினார்.