உள்ளூர் செய்திகள்

பா.ம.க.,வினர் மனு

கடலுார்:இடஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலிசெலுத்தும் நிகழ்விற்கு பாதுகாப்பு கேட்டு மனு பா.ம.க., வினர் மனு அளித்தனர். இதுகுறித்து எஸ்.பி., ஜெயக்குமாரிடம், பா.ம.க., மாவட்டசெயலாளர்கள் ஜெகன், கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு: வரும் 17ம் தேதி, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில், தைலாபுரத்தில் இருந்து திண்டிவனம் வழியாக இடஒதுக்கீடு போராட்ட தியாகிகளின் நினைவு துாண்கள் அமைந்துள்ள சித்தணி, பாப்பனப்பட்டு, பனையபுரம், கொள்ளுக்காரன்குட்டை வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி