சேத்தியாத்தோப்பில் சி.சி.டி.வி., நிறுவ போலீஸ் - வியாபாரிகள் கருத்தாய்வு
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக போலீஸ் - வியாபாரிகள் கருத்தாய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, டி.எஸ்.பி., விஜிகுமார் தலைமை தாங்கி கேமரா பொருத்துவதற்கு வியாபாரிகளின் கருத்து கேட்டு ஆலோசனை செய்தார். இன்ஸ்பெக்டர் சேதுபதி, சப்இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், சேத்தியாத் தோப்பு கடைவீதி, வடக்கு மெயின் ரோடு, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி அதற்கான தொழில்நுட்ப பணியாளரை நியமித்து ஆய்வு செய்வது, சிதம்பரம், வடலுார், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், நெய்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள்அனைத்தும் கட்டாயம் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர்.கூட்டத்தில், நகர வியாபாரிகள் சங்க தலைவர் மகாராசன், மணிமாறன், ஆனந்தன், கிேஷார், கிட்டு, சவுந்தரராஜன், பன்னாசேட்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.