மக்கி வீணாகி வரும் போலீஸ் பறிமுதல் வாகனங்கள்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், சாலையோரம் நிறுத்தப்பட்டு, மக்கி வீணாகி வருகிறது.சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் கடந்த காலங்களில் திருட்டு மணல் கடத்தல் மாட்டு வண்டிகள், மினி டெம்போ உள்ளிட்டவை பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டிகள் மக்கி துருப்பிடித்து வீணாகி வருகிறது.மேலும், அகரஆலம்பாடி, வீரமுடையாநத்தம் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளாதல் பஸ்கள் லாரிகள் கனரக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து இடையூராக இருந்து வருகிறது. பஸ் ஏற காத்திருக்கும் மாணவ, மாணவிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த வண்டிகளிலிருந்து வரும் விஷ ஜந்துக்களால் அச்சமடைகின்றனர்.சாலையில் கனரக வாகனங்கள் கடந்து செல்லும் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்லமுடியாத அளவிற்கு பழுதடைந்த வாகனங்கள் பல ஆண்டுகளாக கிடந்து வருகின்றனர்.எனவே பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தி சாலையை சுத்தம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.