மேலும் செய்திகள்
மகள் மாயம் : தந்தை புகார்
14-Sep-2025
வடலுார் : இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை மிரட்டிய 2க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர் வடலுார், ஆபத்தாரணபுரம் பகுதியில் உள்ள பச்சைவாழி அம்மன் கோவிலை, சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் பார்வையிட, அறநிலையத்துறை குழுவினர் கடந்த மாதம் 19ம் தேதி சென்றனர். அங்கு அதிகாரிகளை அப்பகுதியை சேர்ந்த சிலர் வழிமறித்து திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கடலுார் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், 56; அளித்த புகாரின் பேரில், ஆபத்தாரணபுரம் பகுதியைச் சேர்ந்த பாபு, பூசாலிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மற்றும் சிலர் மீது வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
14-Sep-2025