மேலும் செய்திகள்
முதியவர் சாவு போலீசார் விசாரணை
03-Jan-2025
அரியாங்குப்பம் : நாய்க்கு விஷம் வைத்து கொன்றது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அரியாங்குப்பம், காந்தி வீதியை சேர்ந்தவர் பிரபாவதி, 44, இவர் தனது வீட்டில், நாய்களை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் வளர்த்து வந்த நாய், உடல் நிலை பாதிக்கப்பட்டு, சாப்பிடாமல் இருந்தது. கால்நடை மருத்துவரிடம் காண்பித்த போது, நாய் விஷம் உணவை சாப்பிட்டு இருப்பதாக, தெரிவித்தனர். அதனை அடுத்து, நாய் திடீரென இறந்தது.இந்நிலையில், நாய்க்கு உணவில், விஷம் வைத்து கொன்று இருப்பதாக, சந்தேகம் உள்ளது என, பிரபாவதி, அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
03-Jan-2025