உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அஞ்சல் சேவை குறை தீர் கூட்டம் 

 அஞ்சல் சேவை குறை தீர் கூட்டம் 

கடலுார்: கடலுாரில், அஞ்சல் சேவை மக்கள் குறைதீர்ப்பு மன்றக் கூட்டம் நடக்கிறது. அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கலைவாணி செய்திக்குறிப்பு: அஞ்சல் சேவை மக்கள் குறைதீர்ப்பு மன்றத்தின் கூட்டம் வரும் டிச.5ம் தேதி மாலை 3:00 மணிக்கு கடற்கரை சாலை, வண்ணாரப்பாளையத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலக சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்னைகள், புகார்கள் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டு தீர்வுகள் காணப்படும். இம்மன்றத்தின் விவாதத்துக்கான புகார்கள் மற்றும் குறைகள் ஏதாவது இருப்பின் அவைகளை அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலுார் கோட்டம், என்ற முகவரிக்கு வரும் 28ம் தேதிக்கு முன்பு கிடைக்குமாறு எழுதி அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை