உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில போட்டிக்கு தகுதி மாணவர்களுக்கு பாராட்டு

மாநில போட்டிக்கு தகுதி மாணவர்களுக்கு பாராட்டு

பெண்ணாடம்: மாநில அளவில் நடைபெறும் தடகளம், பீச் வாலிபால் போட்டிக்கு தகுதி பெற்ற, இறையூர் அருணா பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர். தஞ்சாவூரில் கடந்த 2 நாட்களுக்கு முன் தடகள போட்டி நடந்தது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், பெண்ணாடம் அடுத்த இறையூர் அருணா உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர் விஷ்வஜித் முதலிடம் பிடித்து, மாநில அளவில் நடைபெற உள்ள தடகள போட்டிக்கு தகுதி பெற்றார். இதேபோன்று, நாகப்பட்டிணத்தில் நடந்த 'பீச் வாலிபால்' போட்டியில் பங்கேற்ற பிளஸ் 2 மாணவர்கள் செல்வபாரதி, சுஜித்வர்மன், விக்னேஷ் ஆகியோர் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி செயலாளர் ஞானபிரகாசம் பாராட்டி, பரிசு வழங்கினார். தலைமை ஆசிரியர் கோபி, உடற்கல்வி இயக்குனர் ராஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் தினேஷ், அருள்முருகன், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி