மேலும் செய்திகள்
சாலை மறியல்: 450 ஆசிரியர் கைது
18-Jul-2025
கடலுார்: கடலுாரில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் நடந்தது.தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் (டிட்டோஜாக்) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொதுச் செயலாளர் ஜெகநாதன் தலைமையில் நிர்வாகிகள் அந்தோணி ஜோசப், சாந்தகுமார், குமரன், பாஸ்கர், ராஜேந்திரன், சுரேஷ், மணிவண்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 32 பெண்கள் உள்ளிட்ட 107 பேரை கடலுார் புதுநகர் போலீசார் கைது செய்தனர்.
18-Jul-2025