உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிரைம் பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங்கில் அசத்தல்

பிரைம் பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங்கில் அசத்தல்

வேப்பூர்; சேலம், சவுடேஸ்வரி மகளிர் கல்லூரியில் ஸ்கேட்டிங் அகாடமி மாணவர்களுக்கான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் நடந்தது. அதில், வேப்பூர் பிரைம் இன்டர்நேஷ்னல் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் 11 பேர் பங்கேற்றனர். அவர்கள் 10 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். அவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ