உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு

 முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு

கடலுார்: நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடியில் புதியதாக கட்டப்பட்டு வரும் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்டுமானப் பணிகளை முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்தார். கடலுார் மாவட்டம், நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடியில் புதியதாக மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் பணி நடக்கிறது. பணிகளை கடலுார் முதன்மை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி, நேற்று ஆய்வு செய்தார். மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் இரண்டாவது சிறப்பு மாவட்ட நீதிபதி பிரகாஷ், முதன்மை சார்பு நீதிபதி ராஜேஷ்கண்ணன், நெய்வேலி சார்பு நீதிபதி உமாமகேஸ்வரி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ