உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தரமான குடிநீர் பைப் அமைக்க கோரி மறியல்

தரமான குடிநீர் பைப் அமைக்க கோரி மறியல்

கடலுார் : கடலுார் அருகே தரமான குடிநீர் பைப்புகள் அமைக்கக் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலுார் அடுத்த காரைக்காடு பகுதியில், பொதுமக்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது அப்பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடப்பதால், குடிநீர் பைப்புகள் அகற்றப்பட்டு புதிய பைப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. புதியதாக அமைக்கப்படும் பைப்புகளை தரமானதாகவும், பெரிய அளவிலும் அமைக்க வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று காலை 11:00 மணிக்கு காரைக்காடு பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த முதுநகர் போலீசார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, குழாய்களை தரமானதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ