உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் 2வது நாளாக போராட்டம்

இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் 2வது நாளாக போராட்டம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் கோரி பா.ம.க.,வினர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம், கம்மாபுரம் அடுத்த வி.சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செல்வம், 59. கடந்த 11ம் தேதி நெல் வயலுக்கு நீர்ப்பாய்ச்ச சென்றபோது, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் குடும்பத்துக்கு 50 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரி இரண்டாம் நாளாக நேற்று மதியம் 1:30 மணிக்கு நுாற்றுக்கும் மேற்பட்ட உறவினர்களுடன், பா.ம.க., மாவட்ட செயலாளர் சுரேஷ், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சிங்காரவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டத்திற்கு தயாராகினர் தாசில்தார் அரவிந்தன், இன்ஸ்பெக்டர் குமாரி, சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணகி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து, 3:30 மணிக்கு விவசாயி செல்வம் உடலை பெற்றுக் கொண்டு, கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி