உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர் வழங்காததை கண்டித்து நெல்லிக்குப்பம் அருகே மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து நெல்லிக்குப்பம் அருகே மறியல்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுார் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்க 3 குடிநீர் டேங்குகள் உள்ளன. அதில் ஒன்றில் ஒரு மாதமாக மோட்டார் பழுதாகி இயங்கவில்லை. நேற்று மற்றொரு டேங்கிலும் மோட்டார் இயங்கவில்லை. இதனால் மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. நேற்று மாட்டு பொங்கலை கொண்டாடுவதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலை பண்ருட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உறுதியளித்தார். அதையேற்று மறியலை விலக்கி கொண்டனர். இதனால் காலை 9:00 மணி முதல் 9:30 வரை போக்குவரத்து அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி