மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
13-Oct-2025
சேத்தியாத்தோப்பு: கத்தாழை கிராமத்தில் மழையில் ஓட்டு வீடு சுவர் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நிவாரண பொருட்கள் வழங்கினார். கடலுார் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே உள்ள கத்தாழை கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மனைவி ருக்குமணி, 78; கடந்த வாரம் பெய்த கனமழையின்போது, இவரது ஓட்டு வீடு சுவர் இடிந்து விழுந்ததது. இதில், ருக்குமணி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்த புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மூதாட்டி ருக்குமணிக்கு ஆறுதல் கூறி நிவார பொருட்கள் வழங்கினார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், மருதை முனுசாமி, அவைத்தலைவர் செல்வராசு, ஜெயசீலன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் அருளழகன், கோபி, மணவாளன், மணிமாறன், மணிகண்டன், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
13-Oct-2025