அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கல்
விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், பெண்ணாடம் அரிமா சங்கம் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். அரிமா சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், பெண்ணாடம் அரிமா சங்க தலைவர் வசந்தராஜ், செயலர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி, மாவட்ட தலைவர் அருள்முருகன், திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் ராஜசேகர் ஆகியோர் போதை பொருளினால் ஏற்படும் தீமைகள், நேர மேலாண்மை, விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், மனோகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.மேலும், இந்த நிகழ்ச்சியில், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.