உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கல்

ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கல்

கடலுார்: கடலுாரில், ஆயுத பூஜையை முன்னிட்டு டிப்பர் லாரி உரிமையாளர் சங்க ம் சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்கத் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான பிரகாஷ் தலைமை தாங்கினார். செயலாளர் காசிநாதன், பொருளாளர் கோபிநாதன், துணைத் தலைவர் விஜயகுமார், துணை செயலாளர்கள் கவாஸ்கர், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் எஸ்.பி., ஜெயக்குமார், 500க்கும் மேற்பட்ட டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கினார். டி.எஸ்.பி., ரூபன்குமார் வாழ்த்திப் பேசினார். செயற்குழு உறுப்பினர் கனகராஜ், குமார், விஜயகுமார், ராமலிங்கம், சுரேஷ், அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி