உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வேப்பூர்: வேப்பூர் அடுத்த தொண்டாங்குறிச்சி ஊராட்சியில் மக்கள் குறை கேட்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மங்களூர் தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் சின்னசாமி தலைமை தாங்கினார். திட்டக்குடி தாசில்தார் உதயக்குமார், மங்களூர் பி.டி.ஓ., சண்முக சிகாமணி, சிவக்குமார், மங்களூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மக்களின் குறைகளை கேட்டறிந்து, பெண்களுக்கு இலவச சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வி ராஜரத்தினம், பொறியாளர் சண்முகம், மங்களூர் ஒன்றிய தி.மு.க., நிர்வாகி நிர்மல்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், வேப்பூர் அடுத்த புல்லூர், சிறுகரம்பலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் மக்கள் குறை கேட்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசுகையில், 'மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் திட்டக்குடி தொகுதியில் மட்டும், 55 ஆயிரம் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. விடுபட்ட குடும்பங்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை