மக்கள் குறை கேட்பு கூட்டம்
ராமநத்தம்: ராமநத்தம் அருகே, எழுத்துார் ஊராட்சியில் மக்கள் குறை கேட்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பங்கேற்று, மக்களின் குறைகளை கேட்டறிந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேபோல தச்சூர், கண்டமத்தான், புலிகரம்பலுார், நாங்கூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் மக்கள் குறை கேட்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், திட்டக்குடி தாசில்தார் உதயக்குமார், தி.மு.க., ஒன்றிய செயலர் செங்குட்டுவன், தி.மு.க., நிர்வாகிகள் திருவள்ளுவன், குமணன், சேகர், ராமசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.