உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பொது சந்தை வசதி மையம் விண்ணப்பங்கள் வரவேற்பு

 பொது சந்தை வசதி மையம் விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுார்: சுய உதவிக்குழு தயாரிப்புகளுக்கான பொது சந்தை வசதி மையத்தில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் ஒரு கணக்காளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் பொது சந்தை வசதி மையத்திற்கு மேலாளர் மற்றும் கணக்காளர்(உதவியாளர்) பணியிடங்களுக்கு பணியாளரை தேர்வுசெய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. விண்ணப்பங்கள், மேலாளர், மாவட்ட முகமை, பூமாலை வணிக வளாகம் தென்கோட்டைவீதி, சேலம் மெயின் ரோடு, விருத்தாசலம் என்ற முகவரிக்கு, 25ம் தேதி மாலை 5:45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். பொருளாதாரம், வணிகம், சந்தைப்படுத்தல் துறையில் பட்டதாரியாக இருக்க வேண்டும், மேலும் தயாரிப்புகளின் மதிப்பு கூட்டல் பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்துதல் வழிகாட்டுதல் வழங்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மகளிர் திட்டம், உதவித் திட்ட அலுவலரை (வாழ்வாதாரம்) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை