மேலும் செய்திகள்
மகள் மாயம் : தந்தை புகார்
15-Jun-2025
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் சாலை பணிக்காக கொண்டு வரப்பட்ட ஜல்லிகளை சாலையிலேயே கொட்டி வைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நடுவீரப்பட்டு-வெள்ளக்கரை சாலையில் உள்ள நைனாப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி,அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் ஸ்டேஷன் ஆகியவைகள் உள்ளது. மேலும் குமளன்குளம், சஞ்சிவீராயன்கோவில், ராணிப்பேட்டை, கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் நடுவீரப்பட்டுக்கு வந்து செல்லும் பிரதான சாலையாகும்இந்த சாலை வழியாக தான் தினமும் கனரக லாரிகள் அதிகளவு செம்மண் குவாரிக்கு வந்து செல்கிறது. நைனாப்பேட்டையில் புதியதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. சாலை பணிக்காக வந்த ஜல்லியை சாலையிலேயே கொட்டப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எதிரில் வரும் வாகனங்கள் வழி விட்டு ஒதுங்க முடியாத நிலை உள்ளது. எனவே, ஜல்லிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15-Jun-2025