உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளை நிலங்களில் சூழ்ந்த மழைநீர் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்

விளை நிலங்களில் சூழ்ந்த மழைநீர் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் பெய்த கன மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மழையில் மூழ்கி சேதமடைந்துள்ளது. சேத்தியாத்தோப்பு அடுத்த நங்குடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் குறுவை நெல் நடவு சாகுபடி செய்துள்ளனர். நெல் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரானது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த திடீர் கனமழை காரணமாக இப்பகுதி விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளது. கடந்த காலங்களில் நிலங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் வெளியேற வசதியாக வடிகால் வசதி இருந்தது. ஆனால், வி.கே.டி., சாலை பணியின் போது, வடிகால் வாய்க்கால் அகற்றப் பட்டது. இதன் காரணமாக தற்போது, பெய்த மழையால் நிலங்களில் மழைநீர் சூழ்ந்து நெல் வீணாகியுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை