வெய்யலுாரில் ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுாரில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.புவனகிரி தொகுதி மேம்பாட்டு நிதி 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வெய்யலுார் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி ரேஷன் கடையை திறந்து வைத்தார்.கூளாப்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலர் சாம்பமூர்த்தி, ஊராட்சி தலைவர் ராஜ்மோகன், துணைத் தலைவர், கவிதா சுகுமார், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், ஒன்றிய செயலாளர் கருப்பன், கிளை செயலாளர்கள் வேல்முருகன், தம்பிதுரை, அரங்கப்பன், செல்வராசு, ராஜ்குமார், கமலக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.