உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் கடை பணியாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

ரேஷன் கடை பணியாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

கடலுார்: தமிழக ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதுகுறித்து கடலுாரில் தமிழ்நாடு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: ரேஷன் கடைகளில் சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டும் என்பதற்காக பி.ஓ.எஸ்.,விற்பனை முனைய கருவியையும், எடை தராசையும் ப்ளுடூத் மூலம் இணைத்துள்ளனர். இதே நடைமுறையை கிடங்குகளிலும் பயன்படுத்த வேண்டும். சரியான எடையில் வழங்க பொருட்களை, பொட்டலங்களில் வழங்க வேண்டும். பொது வினியோக திட்டம் பல துறைகளின் கட்டுப்பாட்டில் வருவதால் நிர்வகிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சிரமங்களை போக்க, தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல தனித்துறைஏற்படுத்தவேண்டும். பணியாளர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை முழுமையாக உரிய கணக்கில் செலுத்தாமல் உள்ளனர். இவற்றை சரிசெய்ய ரேஷன்கடை பணியாளர்களை அழைத்துப்பேசி முடிவெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. அரசு பணியாளர் சங்க மாநில பொருளாளர் சரவணன், ரேஷன் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் கந்தன், தேவராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி