மேலும் செய்திகள்
கடலுார் முதுநகர் அருகே வாலிபர் குத்திக் கொலை
02-Jan-2025
கடலுார் : கொலைக் குற்றவாளிகளை பிடிக்காததால், இறந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுப்பதால், போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.கடலுார் முதுநகர் அடுத்த சான்றோர்பாளையத்தைச் சேர்ந்த சங்கர்,34; கடந்த 1ம் தேதி சுத்துகுளம் அருகே கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். முன்விரோதம் காரணமாக சுத்துக்குளத்தைச் சேர்ந்த சதீஷ், அன்பு ஆகியோர் சங்கரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலைக்குற்றவாளிகளை பிடிக்கும் வரை இறந்த சங்கரின் உடலை வாங்கமாட்டோம் என அவரது உறவினர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் பிரேத பரிசோதனை முடிந்தும், சங்கரின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலேயே உள்ளது. இதனால் குற்றவாளிகளை பிடிக்க கடலுார் முதுநகர் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
02-Jan-2025