பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், கன மழையால் சேதமடைந்த மூன்று வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை பகுதியில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்தது. மழையால், சாரம்மாள், நிர்மல் பிரியா,ஸ்ரீபிரியா ஆகிய 3 பேரின் வீடுகள் இடிந்து கீழே விழுந்து சேதமடைந்தன. இதில், பாதிக்கப்பட்டகுடும்பத்திற்குநேற்று பாண்டியன் எம்.எல்.ஏ., நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார். அவருடன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், நகர இளைஞரணிசெயலாளர் ஜெய்சங்கர், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர்ரெங்கம்மாள், குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, நகர ஜெ., பேரவை செயலாளர் சந்தர் ராமஜெயம், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, மாவட்ட ஜெ., பேரவை இணைச் செயலாளர் பாஸ்கர், ஒன்றியபொருளாளர் பாஸ்கர், தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் கலைவாணன், நிர்வாகிகள், அஸ்சலாம், எஹயாமரைக்காயர், காமில் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.