உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகராட்சிக்கு வாடகை பாக்கி; 2 கடைகளுக்கு சீல்

நகராட்சிக்கு வாடகை பாக்கி; 2 கடைகளுக்கு சீல்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 2 கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடைகளுக்கான வாடகை செலுத்த தவறினால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, போலீஸ் நிலையம் அருகே உள்ள 2 நகராட்சி கடைகளுக்கு வாடகை செலுத்தாதால், அதிகாரிகள் சீல் வைத்தனர்.இதுகுறித்து கமிஷனர் கிருஷ்ணராஜன் கூறுகையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் வாடகையை பிப்ரவரி மாதத்துக்குள் செலுத்த வேண்டும். வரி செலுத்தாதவர்களின் சொத்துகள் ஜப்தி செய்யப்படும்.குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க உடனடியாக வரிகளை செலுத்தி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ