விழிப்புணர்வு முகாம் நடத்த கோரிக்கை
புவனகிரி; அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டுமென, ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு, ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் குணசேகரன் அனுப்பிய மனு: உடல் உறுப்புகள் தானம் வழங்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் பல ஆயிரம் பேர் உடல் உறுப்புகள் கேட்டு, பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். தமிழக அரசு ஆண்டுதோறும் செப்., 23ம் தேதி உடல் உறுப்பு தான தினமாக அனுசரிக்கும் நாளில், கல்லுாரிகள், அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம், ரத்த தானம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.