உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திட்டக்குடி - செம்பேரிக்கு பஸ் இயக்க கோரிக்கை

திட்டக்குடி - செம்பேரிக்கு பஸ் இயக்க கோரிக்கை

பெண்ணாடம் : திட்டக்குடியிலிருந்து பெண்ணாடம் வழியாக செம்பேரி வரை இயங்கிய, அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திட்டக்குடி பணிமனையில் இருந்து பெண்ணாடம் வழியாக செம்பேரி வரை (தடம் எண் - 7) அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி மற்றும் அரியலூர் மாவட்டம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், புதுப்பாளையம், தெத்தேரி முள்ளுக்குறிச்சி, ஆதனக்குறிச்சி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்தனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் எவ்வித அறிவிப்புமின்றி, திட்டக்குடியிலிருந்து செம்பேரி செல்லும் டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. இதனால், பைக், சைக்கிள் போன்ற வாகனங்களில் கிராம மக்கள் பெண்ணாடம் வந்து, அங்கிருந்து திட்டக்குடி, விருத்தாசலம், கடலுார், பெரம்பலுார் உட்பட பல பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயிகள் பஸ் வசதியின்றி மிகுந்த சிரமம் அடைகின்றனர்.எனவே, திட்டக்குடி - செம்பேரி செல்லும் அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை