உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விளையாட்டு திடல் சீரமைக்க கோரிக்கை

 விளையாட்டு திடல் சீரமைக்க கோரிக்கை

திட்டக்குடி: எரப்பாவூரில் பாழாகி வரும் விளையாட்டு திடலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லுார் ஒன்றியம், திட்டக்குடி அடுத்த எரப்பாவூர் ஊராட்சியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்தாண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விளை யாட்டுத் திடல் அமைக்கப்பட்டது. ஓரிரு மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த விளையாட்டுத்திடல், போதிய பராமரிப்பின்றி பாழாகிறது. இதனால் விளையாட்டுத் திடலை சிறுவர்கள், இளைஞர்கள் பயன்படுத்த முடியாமல் முட்புதர்கள் மண்டியுள்ளன. கிராம சிறுவர்கள், இளைஞர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரப்பாவூரில் பாழாகி வரும் விளையாட்டுத்திடலை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை