உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நல்லுார் சாலையை சீரமைக்க கோரிக்கை

 நல்லுார் சாலையை சீரமைக்க கோரிக்கை

வேப்பூர்: நல்லுார்- ஐவதுகுடி தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். வேப்பூர் அடுத்த ஐவதுகுடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் நல்லுார்-ஐவதுகுடி தார்ச்சாலை வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு கால்நடை மற்றும் வட்டார மருத்துவமனைகள், சார்ப்பதிவாளர் அலுவலகம், வணிக கடைகளுக்கு தினசரி வந்து செல்கின்றனர். இந்த சாலை சேதமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பல முறை தகவல் தெரித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராம மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை