உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மலையாண்டவர் கோவில் சாலை அகலப்படுத்த கோரிக்கை

 மலையாண்டவர் கோவில் சாலை அகலப்படுத்த கோரிக்கை

நடுவீரப்பட்டு: மலையாண்டவர் கோவிலுக்கு செல்லும் தார்ச்சாலையை அகலப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் மலையாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் தினமும் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு திருவிழா காலங்களில் கார்களில் வரும் பக்தர்கள், சி.என்.பாளையம் பஸ் நிறுத்தத்திலிருந்து, புத்திரன்குப்பம் செல்லும் சாலை வழியாக தான் செல்ல வேண்டும். இந்த சாலை இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அகலம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் சி.என்.பாளையம் பஸ் நிறுத்தத்திலிருந்து, புத்திரன்குப்பம் வரை இந்த சாலையை அகலப்படுத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ