உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மனு

நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மனு

கடலுார், : ஊதியத்துடன் அகவிலை படி கணக்கீடு செய்து புதிய ஊதிய உத்தரவு வழங்கக்கோரி, தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள்,கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அந்த மனுவில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி 1.10.2017 முதல் 31.12.2023 வரை மாத ஊதியத்துடன் அகவிலைப்படி கணக்கீடு செய்து, புதிய ஊதிய உத்தரவு வழங்கக்கோரி கலெக்டரிடம் தொடர்ந்து மனு கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எங்களுக்கு ஊதிய உத்தரவு வழங்க வேண்டும். வழங்க காலம் தாழ்த்தினால், இதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ