உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குவாரி பள்ளங்களில் தண்ணீர் விபத்து அபாயம் 

 குவாரி பள்ளங்களில் தண்ணீர் விபத்து அபாயம் 

நடுவீரப்பட்டு: செம்மண் குவாரிகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம்,குமளங்குளம்,விலங்கல்பட்டு,சிலம்பிநாதன்பேட்டை பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட செம்மண் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் பல இடங்களில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளி உள்ளனர். இதனால், குவாரியில் உள்ள பள்ளங்களில் தற்போது பெய்து வரும் மழையில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. இந்த குவாரியில் தேங்கி உள்ள தண்ணீரில் குளிக்க சென்ற சிறுவர்கள் கடந்த காலங்களில் இறந்துள்ளனர். அதனால், மாவட்ட நிர்வாகம் இந்த செம்மண் குவாரிகளை ஆய்வு செய்து, பொது மக்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை