உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திட்டக்குடி அரசு கல்லுாரியில் சாலை பாதுகாப்பு கருத்தரங்கு

திட்டக்குடி அரசு கல்லுாரியில் சாலை பாதுகாப்பு கருத்தரங்கு

திட்டக்குடி; திட்டக்குடி நெடுஞ்சாலை உட்கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி கோட்ட பொறியாளர் புனிதா தலைமை தாங்கினார். சாலை பாதுகாப்பு உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராஜசேகர் வரவேற்றார். உதவி பொறியாளர்கள் திட்டக்குடி கண்ணன், வேப்பூர் தமிழ்ச்செல்வி, சாலை பாதுகாப்பு உதவி பொறியாளர் தர்மராஜ் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். விரிவுரையாளர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை