மேலும் செய்திகள்
ரூ. 1 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பி திருட்டு
19-Jun-2025
பண்ருட்டி,; பண்ருட்டியில் 2 பூக்கடைகளில் புகுந்து ரூ. 3.90 லட்சம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பண்ருட்டியைச் சேர்ந்தவர் அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன்.45; இவர், காந்திரோட்டில் பூக்கடை வைத்துள்ளார். இவர் கடையை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூட்டிச் சென்றார். நேற்று காலை 6:00 மணிக்கு கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, கல்லா பெட்டியை உடைத்து மர்ம நபர்கள் 1 லட்சம் ரூபாயை திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணை நடத்தியதில், மேற்கூரை சிமெண்ட் ஷீட்டை உடைத்து உள்ளே வந்து பணத்தை திருடியது தெரிந்தது. 'சிசிடிவி'யில் பதிவான காட்சிகள் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இவரது கடையில் இருந்து 50 மீட்டர் துாரத்தில் உள்ள பண்ருட்டியைச் சேர்ந்த அழகுமுத்து,40; என்பவரின் பூக்கடையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 2.90 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இருவரும் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
19-Jun-2025