உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

கடலுார்: கடலுாரில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதோடு, திட்டத்திற்கான நிதியை குறைத்த மத்திய அரசைக்கண்டித்தும், பெயர் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடலுார் புதிய கலெக்டர் அலுவலகம் முன் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தலைவர் சண்முக சிகாமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சீத்தாபதி வரவேற்றார். மாவட்ட செயலாளர் கொளஞ்சி, கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஓய்வுபெற்றோர் சங்க மாநில துணைத்தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் ஆதவன், பொருளாளர் பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். மாநில துணைத்தலைவர் சரவணன் நிறைவுரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி