மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவர்களுக்கு தி.மு.க., இனிப்பு வழங்கல்
19-Mar-2025
விருத்தாசலம்; கொளஞ்சியப்பர் கோவிலில் ஆன்மிக நுால் விற்பனை நிலையம் திறப்பு விழா நடந்தது.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆன்மிக நுால் விற்பனை நிலையத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையொட்டி கோவில் வளாகத்தில் நடந்த விழாவில், கோவில் ஆய்வாளர் பிரேமா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, துணை செயலாளர் மணிவேல், இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார் முன்னிலை வகித்தனர்.செயல் அலுவலர் பழனியம்மாள் வரவேற்றார். தி.மு.க., விளையாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன், முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை துணை இயக்குனர் முருகதாஸ், ராயர், பாலசுப்ரமணியன், தி.மு.க., நிர்வாகிகள் வீரபாண்டியன், கோபால் உட்பட பலர் பங்கேற்றனர். ஆன்மிகம், தலங்களின் வரலாறு அடங்கிய நுாற்றுக்கணக்கான நுால்கள் விற்பனைக்கு உள்ளன. முன்னதாக சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
19-Mar-2025