உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 28ம் தேதி சம்ப்ரோக்ஷணம்

கடலுார் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 28ம் தேதி சம்ப்ரோக்ஷணம்

கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், வரும் 28ம் தேதி சம்ப்ரோக்ஷணம் நடக்கிறது. கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி மாலை வாஸ்து பூஜைகள் நடக்கிறது. 26ம் தேதி காலை 10:30 மணி முதல் கும்ப மண்டல, பிம்ப, அக்னி சதுஸ்வான பூஜை, முதல்கால ஹோமம் நடக்கிறது. மாலை 6:00 மணி முதல் அஷ்டபந்தனம் சாற்றுதல், இரண்டாம் கால ஹோமம் நடக்கிறது. 27ம் தேதி காலை திருமஞ்சனம், மூன்றாம் கால ஹோமம் நடக்கிறது. மாலை உற்சவருக்கு 81 கலச திருமஞ்சனம், நான்காம் கால ஹோமம் நடக்கிறது. 28ம் தேதி காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, ஐந்தாம் கால யாகசாலை, பூர்ணாஹூதி சாற்றுமறை, 7:00 மணிக்கு யாத்ராதானம், மஹா கும்பங்கள் புறப்பாடு நடக்கிறது. 8:30 மணிக்கு மேல் மூலவர் விமானங்கள் மற்றும் தோரணவாயிலில் புனித நீர் தெளித்து மகா சம்ப்ரோக்ஷணம் நடக்கிறது. பூஜைளை பட்டாச்சாரியார்கள் கோசகன், தேவநாதன் செய்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் சரவணரூபன், செயல் அலுவலர் ஞானசுந்தரம் மற்றும் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ