உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணிமுக்தாற்றில் துாய்மை பணி: நகராட்சி சேர்மன் ஆய்வு

மணிமுக்தாற்றில் துாய்மை பணி: நகராட்சி சேர்மன் ஆய்வு

விருத்தாசலம்,: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்றும் பணியை நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு மாசிமக திருவிழா வரும் 24ம் தேதி நடக்கிறது. இதில், 5 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டு மணிமுக்தாற்றில், நீராடி முன்னோரர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர்.இந்நிலையில், மணிமுக்தாற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பு கட்டையால், விருத்தாசலம் நகராட்சியில் இருந்த வெளியேறும் கழிவுநீர், பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்கும் பகுதியில் கடல் போல் தேங்கி நிற்கிறது.இதனை வெளியேற்ற இரண்டு பொக்லைன் மூலம் தடுப்புகட்டைகளை உடைத்து வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்தது.தற்போது, அந்த வாய்க்கால் வழியாக கழிவுநீர் வெளியேற்றும் பணி நடக்கிறது. இதனை, நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் நேற்று பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.கவுன்சிலர் கருணா மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ