கடலுார் மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை தொடரும் போராட்டத்தால் பரபரப்பு
கடலுார்: கடலுார் மாநகராட்சியில் கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலுார் மாநகராட்சியில் புதுநகர், முது நகர் என 45 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதிகள் முழுவதும் குப்பைகளை அள்ள 135 நிரந்தர தொழிலாளர்களும், 340 ஒப்பந்த தொழிலாளர்களும் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்வில்லை என கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதம் பிடித்தம் செய்த பி.எப்., தொகை என்ன ஆனது எனத் தெரியவில்லை. 2 மாத சம்பளத்தை வழங்கக்கோரிகடந்த 11ம் தேதி துப்புரவு தொழிலாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களிடம்கடலுார் புதுநகர் போலீ சார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். அதைத்தொடர்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு துப்புரவு தொழிலாளர்கள் திரண்டு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் தனியார் ஒப்பந்தத்தில் பணியாற்றும் சூப்பர் வைசர்களும் பங்கேற்றனர். இவர்களிடம் கடலுார் புதுநகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நேரம் கலைந்து செல்லாதால் ஒரு கட்டத்தில் அவர்களை மாநகராட்சி பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்ற முடிவு செய்தனர். இதை அறிந்த துப்புரவு தொழிலாளர்கள்பாபு கலையரங்கம் சென்று அங்கு பேராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.