உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாத்துக்கூடல் பள்ளி ஆண்டு விழா

சாத்துக்கூடல் பள்ளி ஆண்டு விழா

விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் தெய்வமணி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனகசபை, முன்னாள் ஊராட்சித் தலைவர் சக்திவேல், மேலாண்மைக்குழு தலைவர் ஆனந்தி முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் செல்வவிநாயகம் வரவேற்றார்.ஆசிரியை கீர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். விருத்தாசலம் உதவி கருவூல அலுவலர் வைரக்கண்ணு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். சப் இன்ஸ்பெக்டர் சங்கர் காவல்படை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. கடந்தாண்டில் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி