பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி
கடலுார் : கடலுாரில், காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு பேரணி நடந்தது.திருப்பாதிரிபுலியூர் ஜவான்ஸ்பவன் அருகே துவங்கிய பேரணியை மாவட்ட கூடுதல் எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,ரூபன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அரசுப்பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர். விழிப்புணர்வு பேரணி ஜவான்ஸ்பவனில் துவங்கி கடலுார் டவுன் ஹாலில் முடிவடைந்தது.நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் சித்ரா, மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் சுந்தர், மாவட்ட குழந்தை நலக்குழு தலைவர் லட்சுமி வீரராகவலு மற்றும் போலீசார், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.