உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர் தட்டுப்பாடு; புவனகிரியில் மறியல்

குடிநீர் தட்டுப்பாடு; புவனகிரியில் மறியல்

புவனகிரி : புவனகிரியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.புவனகிரி பேரூராட்சி, கீழ்புவனகிரி 18வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அப்பகுதி அ.தி.மு.க., கவுன்சிலர் ஜெயப்பிரியா தலைமையில் கீழ்புவனகிரி பஸ் நிறுத்தம் அருகே காலை 10:30 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், பொதுமக்கள் மறுத்ததால், சேர்மன் கந்தன், செயல் அலுவலர் செல்லப்பிள்ளை நேரில் சென்று பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, 10:45 மணியளவில் மறியல் விலக்கிக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை