உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த சிறுவம்பார் காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழாநடந்தது.தலைமை ஆசிரியர் மலர்விழி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ஜெயக்கொடி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தனர். ஆசிரியை கதிர்மணி வரவேற்றார். விழாவில், மாணவர்களின் நடனம், விழிப்புணர்வு நாடகம் நடந்தது. தொடர்ந்து, விளையாட்டு, பேச்சு, ஓவியம், புனைவேடப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் (துவக்கக் கல்வி) ஜெயச்சந்திரன் சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினர்.வட்டார கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, ஆசிரியர் பயிற்றுனர் வரதராஜபெருமாள், ஊராட்சி உறுப்பினர் அருள்தேவி, ஊராட்சி செயலாளர் சங்கர் உட்பட பெற்றோர், கிராம மக்கள் பங்கேற்றனர்.ஆசிரியர் சண்முகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்