மேலும் செய்திகள்
அறிவியல் கண்காட்சி
13-Oct-2025
சேத்தியாத்தோப்பு: சிதம்பரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் சரவணன் தலைமை தாங்கி கண்காட்சியை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் ரேணுகாகண்ணன் வரவேற்றார். தமிழ்நாடு விஞ்ஞானி ஜெயபாரதி, அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளாரக பங்கேற்று மாணவர்கள் உருவாக்கியுள்ள கண்காட்சியை பார்வையிட்டு பாராட்டினர். மாணவர்கள் உருவாக்கிய ஏவுகணை, செயற்கைகோள், கணிணி, காற்றாலை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட செயல்வடிவங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை பெற்றோர், ஆசிரியர்கள் பார்வையிட்டனர். கண்காட்சியில் சிறப்பாக இடம் பெற்றிருந்த மாணவர்களின் உருவாக்கத்திற்கு பரிசு மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன.
13-Oct-2025